திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லா நினோ மாற்றத்தால் இந்தியாவை வாட்டி வதைக்கப்போகும் கடும் குளிர்.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை.!
காலநிலை மாற்றத்தினால் ஜனவரி - பிப்ரவரி இடையேயான மாதத்தில் கடும் குளிர் இந்தியாவில் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடமாகவே கடுமையான புயல், மழை, வெயில் என இந்திய பருவநிலை பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. கடலின் ஆழத்தில் இருந்து நீரை மேலே கொண்டு வரும் பூமத்திய ரேகை, வலுவான காற்றாக மாறும் போது லா நினா ஏற்படுகிறது.
லா நினா என்பது உலகளவிலான தீவிரமான வானிலை மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை, தற்போது வரை இல்லாத அளவு வெப்பம் குறைந்து கடுமையான குளிர் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்டுகிறது. இதனால் லா நினா காரணமாக வடகிழக்கு ஆசிய பகுதியில் குளிர்காலத்தில் அதிக மின்சார தேவை இருக்கும் என்றும், இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரியவருகிரியாது.
ஹிமாச்சல் பிரதேசத்தின் பல இடத்தில் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக மாறிவிட்ட நிலையில், வடமாநிலத்தில் வழக்கத்தை விட குளிர்காலம் முன்னதாகவே தொடங்கிவிட்டதாகவும் சிம்லா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இதனால் குளிர்காலத்தை சமாளிக்க தயாராகுமாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.