அத்தைகளிடம் அத்துமீற முயற்சி; மகனை துண்டுதுண்டாக்கி பலிபோட்ட தாய்.!



in Andhra Pradesh Prakasam Man Killed by Mother 

 

2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மகனை, தாய் கோடரியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் வசித்து வருபவர் லட்சுமி தேவி (வயது 57). இவருக்கு ஷியாம் பிரசாத் (வயது 35) என்ற மகன் இருக்கிறார். 

இதையும் படிங்க: 8 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியரை கம்பத்தில் கட்டிவைத்து உதைத்த பெற்றோர்.!

இதனிடையே, கடந்த பிப்.13 அன்று ஷியாம் தனது அத்தை உறவுமுறை கொண்ட 2 பெண்களிடம் அத்துமீற முயற்சித்துள்ளார். இந்த விஷயம் ஷியாமின் தாய் லட்சுமி தேவிக்கு தெரியவந்துள்ளது.

Andhra Pradesh

கோடரியால் வெட்டிக்கொலை

இதனால் மகனின் மீது உச்சகட்ட ஆத்திரத்திற்குச் சென்ற லட்சுமி தேவி, மகனை கோடரியால் தாக்கி 5 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்து, உடலை கால்வாயில் வீசி தலைமறைவாகியுள்ளார். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மகனை கொலை செய்த பெண்ணை தேடி வருகின்றனர். முதற்கட்டமாக விசாரணையில் மேற்கூறிய தகவல் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: மிளகாய்பொடி தூவி ரசித்த கொடுமை.. தாயின் கள்ளக்காதலனால் பிஞ்சுகளுக்கு நேர்ந்த விபரீதம்.!