நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
"வாழவே இடமில்லை, பேராண்டி நீயாவது எங்காவது போய் பிழைச்சிக்க".. ரூ.200 பணத்துக்கு பேரனை விற்ற மூதாட்டி!

வறுமை காரணமாக பெற்றோரை இழந்த பேரனை மூதாட்டி ரூ.200 பணத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள பதிலியா மாவட்டத்தில் வசித்து வரும் மூதாட்டி மந்த் சோரன் (வயது 65). இவரின் கணவர் இயற்கை எய்திவிட்டார். சோரனுக்கு மகன், மருமகள், பேரன் இருந்தனர். கடந்த கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலின் போது, சோரனின் மருமகள் இறந்துவிட்டார்.
இதையும் படிங்க: #BigBreaking: அமைச்சரின் மருமகன்கள் மீது துப்பாக்கிசூடு; ஒருவர் பலி.!
மனைவி உயிரிழந்த சோகத்தில் சோரனின் மகன் வெளியே சென்றவர், இன்று வரை பல ஆண்டுகள் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. சோரனின் மகன் - மருமகளுக்கு மகன் ஒருவர் இருக்கிறார்.
ரூ.200 பணத்துக்கு விற்பனை
தற்போது சிறுவனுக்கு 7 வயது ஆகும் நிலையில், யாசகம் பெற்று, வீடு இன்றி சாலையோரம் தங்கி பிழைப்பு நடத்தி வரும் மந்த் சோரன், பேரனையும் கவனித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் பேரனை கவனிக்க இயலாமல் திணறிய சோரன், ரூ.200 பணத்துக்காக பேரனை விற்பனை செய்தார்.
தான் சாலையில் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்துகிறேன். பேரனாவது எங்காவது சென்று நன்றாக இருக்கட்டும் என விற்றதாக மூதாட்டி தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர், சிறுவனை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தனியாக இருக்கும் மூதாட்டியும் அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: போதை ஆசாமியால் சோகம்; தம்பதி விபத்தில் சிக்கி பலி..!