மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிர்ச்சி..! இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 1000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு!
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மட்டும் 1242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்முறையாக இந்தியாவில் ஒரே நாளில் 1000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது இப்போது தான். இந்தியாவின் மொத்த பாதிப்பு 10453 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக டெல்லியில் 356, மஹாராஷ்டிரா 352, தமிழ்நாடு 98, ராஜஸ்தான் 93, உத்திரப் பிரதேசம் 75 என பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை மஹாராஷ்டிராவில் 2334, டெல்லி 1510, தமிழ்நாடு 1173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள 10453 பேரில் 1193 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று புதிதாக 27 பேர் பலியானதில் பலி எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. 8902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.