"நீ குண்டா இருக்க, வரதட்சணை வாங்கிட்டு வா" - மனைவி மீது மிளகாய்பொடி தாக்குதல் நடத்தி கொடுமை செய்த கணவன்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பீனியா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சாந்தகுமார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்க்கிறார். சாந்தகுமாரின் மனைவி சுந்தரி. தம்பதிகளுக்கு கடந்த 2021 ல் ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டு, பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்கள் இருவருக்கும் தற்போது மகன் இருக்கிறார். இதனிடையே, கடந்த சில வாரங்களாகவே சாந்தகுமார் தனது மனைவி சுந்தரியிடம், உனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று வரதட்சணை வாங்கி வா என கூறியுள்ளார். மேலும், சுந்தரியின் உடல் எடை தொடர்பாக, இருவருக்கும் வாக்குவாதம் உண்டாகியுள்ளது. அதாவது, திருமணத்தின் போது மெல்லிய உடல் அமைப்பை கொண்ட சுந்தரி, பிரசவத்திற்கு பின் உடல் பருமன் பிரச்சனையை சந்தித்துள்ளார்
.
மிளகாய்பொடி தாக்குதல்
இதனால் மனைவி அழகாக இல்லை என சாந்தகுமார் பிரச்சனை செய்து வந்துள்ளார். வரதட்சணை கேட்டும் கொடுமை நடந்துள்ளது. இந்த தகவல் அறிந்து மருமகனை தட்டிக்கேட்க வந்த மாமனார்-மாமியாரும் அவமதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் சாந்தகுமாரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: தமிழக ஓட்டுனருக்கு ஆதரவாக அதிகாரிகளை காரித்துப்பி கடித்துக்கொண்டு கர்நாடக சமூக ஆர்வலர்.. இலஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி.!
இந்நிலையில், சாந்தகுமார் தனது மனைவி, அவரின் தந்தை, சொந்த மகன் மீது மிளகாய்பொடி தூவி தாக்குதல் நடத்தி இருக்கிறார். இதனால் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்படவே, அதிகாரிகள் சாந்தகுமாரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தீராத வயிற்று வலியால் இளம்பெண் விபரீத முடிவு.. 20 வயதில் நேர்ந்த சோகம்.!