ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
11 ஆண்டு காதல் திருமணத்துக்கு, கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்து ட்விஸ்ட் வைத்த பெண்.. பாசத்தால் பரிதவித்து உயிரைமாய்த்த கணவன்.!

அன்பு வைத்த காதல் மனைவி கள்ளக்காதல் வயப்பட்டு, அதனால் குழந்தையும் பெற்றெடுத்தார். மனமுடைந்த கணவன் ஓட்டம் பிடித்த மனைவியை தேடியும் கிடைக்காததால் விபரீத முடிவை எடுத்தார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம், ஒலெனரசிபுரா, மஹாவல்லி கிராமத்தில் வசித்து வருபவர் ரவி. பொக்லைன் இயந்திர ஓட்டுநராக ரவி வேலை பார்த்து வந்துள்ளார். அங்குள்ள அறுவனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் லாவண்யா.
இவர்கள் இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் ஆவார்கள். ரவியின் ரூபாவினரான பிரதீப் என்பவர், அவ்வப்போது ரவியின் வீட்டிற்கு வந்து செல்வார் என கூறப்படுகிறது. அப்போது, பிரதீப் - லாவண்யா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அதிவேகத்தில் நடந்த பயங்கரம்.. 5 பேர் உடல் நசுங்கி பலி.. அப்பளமாக நொறுங்கிய கார்.!
கள்ளக்காதல் பழக்கம்
இதனையடுத்து, கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளது. ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையேயான கள்ளக்காதல் விவகாரம், ரவிக்கு தெரியவரவே, அவர் இருவரையும் கண்டித்துள்ளார். கள்ளக்காதல் ஜோடி ரவியின் கண்டிப்பையும் மீறி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளது.
மனைவி ஓட்டம்
கள்ளக்காதல் காரணமாக கர்ப்பமான லாவண்யாவுக்கு, ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இது ரவி - லாவண்யா இடையே தகராறை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மாதம் நடந்த தகராறில், லாவண்யா குழந்தை உனக்கு பிறக்கவில்லை என்று ரவியிடம் கூறிவிட்டு, குழந்தையுடன் கள்ளக்காதலனை அழைத்து ஓட்டம் பிடித்தார். மனைவி மீது கொண்ட பாசத்தால், ரவி மனைவியை பல இடங்களில் தேடியும் காணவில்லை.
கணவர் தற்கொலை
இந்த விஷயத்தில் கடும் மனத்துயருக்கு உள்ளாகிய ரவி, அங்குள்ள ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விசயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழக ஓட்டுனருக்கு ஆதரவாக, அதிகாரிகளை காரித்துப்பி கடிந்துகொண்ட கர்நாடக சமூக ஆர்வலர்.. லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி.!