தண்ணீர் கேனில் தொடங்கிய தகராறு; திருமணத்தை நிறுத்திய மணமக்கள்.. உற்றார்-உறவினர்கள் சண்டையில் அதிர்ச்சி.!



IN KARNATAKA MARRIAGE sTOPPED

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம், ஜகல்பூர் பகுதியில் வசித்து வருபவர் மனோஜ் குமார். தும்கூர் மாவட்டம் சிரா பகுதியல் வசித்து வருபவர் அனிதா. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. மென்பொருள் துறை வல்லுனர்களாக இருவரும், நேற்று கரம்பிடிப்பதாக இருந்தனர்.

சனிக்கிழமை இரவில் ஹரியூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.இரவு விருந்துக்கும் ஏற்பாடுகள் செய்ப்பட்டன. பலரும் அமர்ந்து சாப்பிட்ட நிலையில், கேட்டரிங் செய்யும் நபர்கள் குடிநீரை சரிவர வழங்கவில்லை.

karnataka

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மணமகன் - மணமகள் வீட்டார் இடையே மிகப்பெரிய விவாதத்தை உண்டாக்கியது. இரவில் தொடங்கிய தகராறு விடிய-வித்யா நீடிக்க, பேச்சுவார்த்தி நடத்தியும் பலனில்லை. இந்த விஷயம் ஒருகட்டத்தில் மணமகன்-மணமகள் இடையே வாக்குவாதத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் அவர்கள் சண்டையிட திருமணம் நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: திருமணத்துக்கு வற்புறுத்திய 22 வயது காதலி கழுத்து நெரித்து கொலை; நண்பர்கள் பேச்சைக்கேட்டு விபரீத செயல்?

வாழப்போற இரண்டு ஜோடிகளை வெட்டி வீம்புக்காக பிரித்துவிட்டோமே என்ற எண்ணம் கூட இல்லாமல், உறவுகள் என்று வந்த நபர்கள் தம்பதி வாழ்க்கைப்பயணத்தில் அடியெடுத்து வைப்பதற்குள் மூடுவிழா நடத்தி என்ன சண்டையாம்? இதுக்கெல்லாமா கோபப்பட்டு இப்படி செய்வாங்க என புலம்பி சென்றது. 

உன்னை நம்பு, உறவை எல்லா இடத்திலும் உனக்காக பேசவிடாதே..

இதையும் படிங்க: உல்லாசத்துக்காக கணவரின் உறவினருடன்., மனைவி ஓட்டம்.. ஆற்றில் மிதந்த சடலம்.!