லாரி - சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 7 பேர் பரிதாப பலி.!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டம், பஹ்ரி பகுதியை நோக்கி லாரி ஒன்று இன்று அதிகாலை சென்றுகொண்டு இருந்தது. அங்குள்ள மேஹாரா நோக்கி சரக்கு வாகனம் ஒன்றில் குடும்பத்தினர் பயணம் செய்தனர்.
இதனிடையே, இந்த இரண்டு வாகனங்களும், இன்று அதிகாலை சுமார் 02:30 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் குடும்பத்தினர் பயணம் செய்த வாகனத்தில் இருந்த 7 பேர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
#WATCH | Bhopal: On accident in Sidhi, Madhya Pradesh CM Mohan Yadav says, "A very sad incident has happened this morning, more than seven people have died and some have been injured in the accident in Sidhi. I request all drivers to drive very carefully, take necessary… pic.twitter.com/vSpE1Aj0QO
— ANI (@ANI) March 10, 2025
இதையும் படிங்க: அதிவேகத்தில் நடந்த பயங்கரம்.. 5 பேர் உடல் நசுங்கி பலி.. அப்பளமாக நொறுங்கிய கார்.!
மேலும், 14 க்கும் அதிகமானோர் காயமடைந்து இருக்கின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து காயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போதை ஆசாமியால் சோகம்; தம்பதி விபத்தில் சிக்கி பலி..!