திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறுவன் மற்றும் சிறுமி ஒரே இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை... காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை சம்பவம்.!
தெலுங்கானா மாநிலத்தில் இளம் காதல் ஜோடிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினருத்திவீரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் 16 வயது சிறுமியும் நட்பாக பழகி வந்திருக்கின்றனர் இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரது வீட்டிலும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். மேலும் பழகுவதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்தும் முடியும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மன வருத்தத்தில் இருந்த காதல் ஜோடி அந்த சிறுவனின் பெற்றோர் வெளியூர் சென்றிருந்தபோது அவனது வீட்டில் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சிறுவனின் பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களது இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணையை நடத்தி வருகின்றனர்.