திருமணம் முடிந்த 2 ஆண்டுகளில் உயிரை மாய்த்த சீரியல் நடிகை; சோகத்தில் ரசிகர்கள்.!
சாகுற வயசா இது? 8 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்.. பெற்றோர் கண்ணீர்.!
8 வயதுடைய சிறுமி சகோதரிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார்க் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜீது. இவருக்கு திருமணம் முடிந்து 14 வயதுடைய மோனிகா, 12 வயதுடைய சமர், 8 வயதுடைய தீக்சா என மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
குழந்தைகள் மூவரும் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அச்சமயம், சிறுமி தீக்ஷா ஷோபாவிலிருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. மாரடைப்பால் நண்பர்கள் கண்முன் பரிதாப மரணம்..!
நெஞ்சு வலி
அப்போது, அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு, நெஞ்சில் கைவைத்து அமர்ந்துள்ளார். மேலும், திடீரென மூக்கில் இருந்து ரத்தம் வந்து மயக்கம் அடைந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மருத்துவமனையில் சிறுமி மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
சிறுமி தீக்ஷாவின் மரணம் அங்குள்ள பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெற்றோர் கண்ணீர் துயருக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தில் நண்பருக்கு பரிசளித்த கையுடன் மயங்கி விழுந்து மாரடைப்பு மரணம்.. பதறவைக்கும் சோகம்.!