மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயது சிறுமியை இரயில்முன் தள்ளிவிட்டு கொன்ற கொடும்பாவி; காதல் பெயரில் உடல் துண்டாகி உயிரிழந்த சிறுமி.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரெய்லி மாவட்டத்தில் வசித்து வரும் 15 வயது சிறுமியை, அப்பகுதியை சேர்ந்த பரியத் என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று தேர்வுக்கு சான்றிதழ் படிவம் நிரப்ப மாணவி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
இரயில்முன் தள்ளிவிட்டு கொலை:
அவரை தன்னுடன் அழைத்துச்சென்ற பரியத், சிறுமியை இஸ்லாம் மதத்திற்கு கட்டாயப்படுத்தி மாற்றியதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, சிறுமியை அங்குள்ள ஆற்று இரயில்வே பாலத்திற்கு அழைத்துசென்றவர், அவ்வழியே வந்த இரயில்முன் தள்ளிவிட்டு கொலை செய்தார் என ஓபி இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடல் துண்டித்து சிறுமி மானம்:
இதனால் உடல் இரண்டாக துண்டித்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக காவல் துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், விசாரணைக்கு பின்னர் குற்றவாளியான பரியத் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை இந்து முன்னணி அமைப்பினர் அங்கு முன்னெடுத்து இருப்பதால் சர்ச்சைக்குரிய சம்பவம் கலவரத்தை ஏற்படுத்தலாம் என்பதால், பல இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.