மனைவியை கொலை செய்து தானும் தூக்கில் தொங்கிய கணவர்; கள்ளக்காதல் பழக்கத்தால் விபரீதம்.!



  in Uttar Pradesh Madura Husband Killed Wife 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா, கன்னையா பகுதியில் வசித்து வருபவர் கோவிந்த் (32). இவரின் மனைவி சரிதா (வயது 28). தம்பதிகள் இருவருக்கும் 5 வயதுடைய மகள் இருக்கிறார். தம்பதி இருவரும் அவ்வப்போது சண்டையிடுவது தொடர்கதை என கூறப்படுகிறது. 

இதனிடையே, வேறொருவருடன் தொடர்பு கொண்ட சரிதா, எந்நேரமும் அவருடன் செல்போனில் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் தம்பதியிடையே நிம்மதியின்மை நிலவி வந்துள்ளது. 

மனைவி கொலை, கணவர் தற்கொலை

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கோவிந்த், தனது மனைவி சரிதாவின் கழுத்தை நெரித்துக்கொலை செய்து, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதையும் படிங்க: மாமனார் - மருமகள் கள்ளக்காதல்; உறவுக்கு தடையாக இருந்த மாமியார் கொடூர கொலை..! 

illegal affair

தாய் - தந்தை சடலமாக வீட்டில் இருக்க, 5 வயது சிறுமி பெற்றோர் எழுந்து வரவில்லை என அழுது இருக்கிறார். பின் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது விபரீதம் புரிந்துள்ளது.

காவல்துறை விசாரணை

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, பின் சோதனையில் கோவிந்தின் கடிதத்தை கைப்பற்றினர். 

அக்கடிதத்தில் மனைவி எப்போதும் கள்ளகாதலருடன் செல்போனில் உரையாடி வந்ததால், விரக்தியில் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்வதாக கூறி இருக்கிறார். மேலும், தம்பதியின் மகளும் தாயின் செயல்பாடுகள் குறித்து வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: மனைவி கழுத்தை நெரித்துக்கொலை; கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவர் கைது.!