திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
சேர்ந்து வாழ மறுத்த கள்ளக்காதலி பெட்ரோல் ஊற்றி எரிப்பு; மாறுவேடத்தில் வீடுபுகுந்து கள்ளக்காதலன் பகீர் செயல்.!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டம், கோஹ் கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சு. இவரின் மனைவி ரேகா (வயது 30). தம்பதிகளுக்கு 5, 7 வயதுடைய இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
சஞ்சுவின் சகோதரி வழி உறவினர் உமேஷ் (28). ரேகா - உமேஷ் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் கடந்த ஆகஸ்ட் 31, 2024 அன்று, கள்ளக்காதல் ஜோடி வீட்டில் இருந்து வெளியேறியது.
இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கள்ளக்காதல் ஜோடி கடந்த பிப்.10 அன்று மீட்கப்பட்டு, பெண் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: விராட் கோலி அவுட் ஆனதால் மாரடைப்பில் இறந்தாரா 14 வயது சிறுமி.?! தந்தை வெளியிட்ட தகவல்.!
மீட்கப்பட்ட பின்னர் ரேகா தனது கணவர் சாஞ்சுவுடன் வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார். இந்நிலையில், உமேஷ் கிராமத்திற்கு பெண் வேடமிட்டு வந்து ரேகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ரேகா மட்டும் இருந்துள்ளார்.
கள்ளக்காதலியை மீண்டும் தன்னுடன் வர அழைத்துள்ளார். இந்த விசயத்திற்கு ரேகா மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் ரேகாவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ரேகா 70 % தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். உமேஷும் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: இளைஞருடன் பேசுவதை தந்தை கண்டித்ததால் விரக்தி; 19 வயது இளம்பெண் தற்கொலை.!