கட்டணம் கேட்டது குற்றமா? கையெடுத்து கும்பிட்டும் ஆட்டோ டிரைவரை அடித்து துவைத்த இளம்பெண்.!



in-uttar-pradesh-mirzapur-auto-driver-beaten

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில், இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் பயணித்து இருக்கிறார். 

பின் அவரின் நிறுத்தம் வந்ததும், ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றுள்ளார். பயணத்திற்கான பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. 

அச்சமயம் பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுநர் கட்டணம் கேட்கவே, ஆத்திரமடைந்த பெண் என்னிடமே கட்டணம் கேட்கிறாயா? என அவரை கடுமையாக தாக்கி இருக்கிறார். 

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கையெடுத்து கும்பிட்டும் பெண்மணி விடாமல் தாக்கி இருக்கிறார். இதனை அவரே வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

பின் இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெண்ணுக்கு எதிராக கண்டனத்தை குவிக்கவே, தற்போது வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, புகாரை ஏற்றுக்கொண்டுள்ள காவல்துறையினர், விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.