தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லீம் லீக், ஓவைஸி, இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு.!
இந்தியாவில் ஆணின் திருமண வயது 21 எனவும், பெண்ணின் திருமண வயது 18 எனவும் சட்டம் அமலில் உள்ளது. கடந்த சுதந்திர தின விழாவின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பெண்ணின் திருமண வயது 18 இல் இருந்து 21 ஆக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சட்டம் தொடர்பான மசோதா விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்படவுள்ளது.
இப்படியான சூழ்நிலையில், பெண்களின் திருமண வயதை 19 இல் இருந்து 21 ஆக உயர்த்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமாஜ்வாடி, இடதுசாரி மற்றும் ஓவைஸி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் பரிந்துரையை எதிர்த்து முஸ்லீம் லீக் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டிசும் வழங்கியது.
இந்த விஷயம் தொடர்பாக முஸ்லீம் லீக் கட்சியின் மேல்சபை எம்.பி அப்துல் வஹாப் தெரிவிக்கையில், "பெண்களின் திருமண வயது 18 இல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இது அத்துமீறல் செய்வதற்கான முயற்சி" என்று தெரிவித்தார்.
இதனைப்போல, சமாஜ்வாதி பிரமுகர் ஷபிகுர் ரகுமான் தெரிவிக்கையில், "இந்தியா ஏழை நாடு. தங்களின் மகளை திருமணம் செய்து கொடுக்கவே இந்திய பெற்றோர்கள் பெரும்பாலும் விரும்புவார்கள். இதனால் வயது உயர்த்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.