பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
இந்தியாவிடம் உதவி கேட்ட அமெரிக்கா..! ட்ரம்ப் எச்சரிக்கையை அடுத்து ஒப்புதல் வழங்கிய இந்திய அரசு.!
ஹைராக்ஸிக்ளோரொகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு ஹைராக்ஸிக்ளோரொகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இதில், உலகளவில் அதிக அளவு ஹைராக்ஸிக்ளோரொகுயின் மருந்தை தயாரிக்கும் நாடாக இந்தியா உள்ளது.
இந்நிலையில், கொரோனா வேகமாக பரவி வரும் அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகள் தங்கள் நாட்டிற்கு ஹைராக்ஸிக்ளோரொகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது. ஆனால், உள்நாட்டில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் ஹைராக்ஸிக்ளோரொகுயின் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை இந்தியா தற்காலிகமாக தடை செய்தது.
இந்தியா தங்கள் நாட்டிற்கு ஹைராக்ஸிக்ளோரொகுயின் மருந்தை அனுப்பவேண்டும், அமெரிக்கா கேட்டும் அதற்கு இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியா மருந்து கொடுக்காதபட்சத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று அந்நாட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
இதனை அடுத்து, அமெரிக்கா உட்பட அவசர நிலையில் இருக்கும் மற்ற நாடுகளுக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஹைராக்ஸிக்ளோரோகுயின் மற்றும் பாரசிட்டமல் மருந்துகளை அனுப்ப இந்தியா அனுமதி அளித்துள்ளது.