#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
7 மாநிலங்களில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை; மேகவெடிப்புக்கும் வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தென்மேற்கு பருவமழையானது தற்போது தொடங்கியுள்ள காரணத்தால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உட்பட இந்திய வடமாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இன்று கேரளாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மீட்பு படையினர் பல மாநிலங்களில் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஒடிசா, ராஜஸ்தான், உத்திரகன்ட், உத்திரபிரதேசம், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேகவெடிப்புக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை மேகவெடிப்பில் மழை பெய்யும் பட்சத்தில், மேகவெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்து பெருவெள்ளம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.