ரயில் பயணத்தில் டீ வாங்கி குடிக்கிறீங்களா? கொஞ்சம் இந்த வீடியோவை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க பிளீஸ்.! 



Indian Train Tea Toilet Water Filling Video 

 

இந்திய இரயில்வே துறை, மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் முதன்மையானது ஆகும். இந்திய இரயில் பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகள், இரயில்வே நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. 

இரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு உணவு, தேநீர் போன்றவையும் விநியோகம் செய்யப்படுகிறது. நெடுந்தூரம் பயணம் செய்யும் ரயில்களில் கேன்டீனும் இடம்பெற்று இருக்கும்.

இதையும் படிங்க: Watch: 3 வது மாடியில் 2 வயது சிறுவனுக்கு காத்திருந்த எமன்; தெய்வமாக உயிரை காப்பாற்றிய நபர்.!


இந்நிலையில், இரயில் பயணத்தின்போது விற்பனை செய்யப்படும் டீ கேனை சுத்தம் செய்ய, கழிவறையில் உள்ள பைப்பை பயன்படுத்தி நீர்விட்டு சுத்தம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த விஷயம் எங்கு? நடைபெற்றது என்ற விபரம் இல்லை எனினும், காண்போரை முகம்சுளிக்க வைக்கும் வகையிலான வீடியோ வெளியாகி இருக்கிறது. 

இந்த விடியோவை கண்டா பலரும் இனி இரயில் பயணத்தில் டீ வாங்கி எப்படி குடிப்பது? என கேள்வியை எழுப்பி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: Watch: செல்போனில் ஆர்வமாக பேச்சு; கைக்குழந்தையுடன் பாதாள சாக்கடையில் விழுந்த பெண்.!