மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 ஆண்டுகளாக ஓட்டுனராக பணிபுரியும் நபருக்கு ஒரே நாளில் 50 கோடி ரூபாய் பரிசு.!
துபாயில் நடந்த லாட்டரி குலுக்கலில் கேரளாவைச் சேர்ந்த் நபர் 50 கோடி ரூபாய் பரிசை வென்றுள்ளார்.
லாட்டரி சீட்டு பல இடங்களில் தடை செய்யப்பட்டிருந்தாலும், சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் தான் கேரள நபருக்கு துபாயில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் துபாயில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் புத்தாண்டு காரணமாக, துபாயில் விற்பனையான மெகா லாட்டரி பரிசு சீட்டை வாங்கிய ஹரிதாஸுக்கு முதல்பரிசாக 50 கோடி ரூபாய் மதிப்பில் பரிசு விழுந்துள்ளது. இது குறித்து ஹரிதாஸ் கூறுகையில், இதனை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இதனை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார்.
ஹரிதாஸைத் தொடர்ந்து அஷ்வின் அரவிந்தாக்ஷன் என்பவருக்கு இரண்டாவது பரிசான 4 கோடி ரூபாயும், தீபக் ராமசந்த் பாட்டியா என்பவருக்கு மூன்றாவது பரிசான 20 லட்சம் கிடைத்துள்ளது.