மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது போதையில், மணமேடையில் மயங்கி விழுந்த மணமகன் !!.. ஆத்திரத்தில் மணமகள் செய்த காரியம்..!!
அசாம் மாநிலத்தில் நல்பாரி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு வீட்டில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், திருமணத்திற்காக உறவினர்களும் வந்திருந்தனர்.
இதை தொடர்ந்து திருமணத்தில் தாலி கட்டுவதற்காக மணமகனை மணமேடையில் உட்கார வைத்து திருமண சடங்குகளும் நடந்து கொண்டிருந்தது. அப்போது மணமகன் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் மணமகள் வீட்டினருக்கு சந்தேகம் உண்டானது.
இதை தொடர்ந்து மணமகன் திடீரென மேடையில் அருகில் இருந்தவர் மீது சாய்ந்தார். இதை பார்த்த மணமகள் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். அதன் பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து மணமகளின் உறவினர்கள் இவ்வாறு கூறினர், எங்கள் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்துவதற்கு முயற்சித்தனர். ஆனால் நிலைமை மோசமானதால் மணப்பெண் அந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று முடிவு செய்தார்.
மேலும் மணமகன் குடும்பத்தில் திருமணத்திற்கு வந்தவர்களில் 95 சதவீதம் பேர் குடித்து விட்டு வந்திருந்தனர். எனவே நாங்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தோம். மாப்பிள்ளையால் காரில் இருந்து இறங்க கூட முடியாத நிலையில் இருந்தார். மணமகனை விட அவரது தந்தை அதிக அளவில் குடித்திருந்தார் என்று கூறினர்.