மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வடமாநிலங்களில் மிகப்பெரிய தாக்குதல் சதித்திட்டம்: ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதி டெல்லியில் கைது.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவைச் சேர்ந்த சைஃபி உஸ்மா என்ற ஷாநவாஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் ஆவார். பொறியாளராக வேலை பார்த்து வந்த இவர், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவுடன் சதி செயலில் ஈடுபடுவதை கண்டறிந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் புனேவில் வைத்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் அவர்களின் பிடியில் இருந்து தப்பிய ஷாநவாஸ், டெல்லியில் மறைவான அடையாளத்துடன் வசித்து வந்தார். இதனையடுத்து, அவரை தீவிரமாக தேடி வந்த என்ஐஏ அதிகாரிகள், ரூபாய் 3 லட்சம் ரொக்கமும் அவர் தொடர்பான தகவல் தெரிவிப்பதற்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.
இதற்கிடையில், தற்போது என்ஐஏ அதிகாரிகள் ஷாநவாஸ் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த மூன்று பேரை கைது செய்துள்ள நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில் வட இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் திட்டத்துடன் இவர்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், வெளிநாட்டைச் சார்ந்த ஒருவர் இவர்களுக்கு தகவல் பரிமாறி, சதிச்செயல் தொடர்பாக கட்டளையிட்டு வந்துள்ளார். இதனால் வெளிநாட்டை சேர்ந்த நபருடன் இணைந்து இந்தியாவுக்கு எதிரான சதிச்செயலை திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. ஐஇடி குண்டு வெடிப்பு சாதனமும் கண்டறியப்பட்டுள்ளது.