விடுதலை 2ம் பாகத்தின் பாடல் நாளை வெளியீடு; காந்த குரலில் இழுக்கும் இளையராஜா.. ப்ரோமோ உள்ளே.!
இஸ்ரோ வெளியிட்ட நிலவின் புதிய படங்கள் !!
கடந்த 17-ஆம் தேதி அன்று நிலவின் சுற்று வட்டப்பாதையில் இருந்த சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான கட்டத்தை மேற்கொண்டது.
இதில், விக்ரம் லேண்டர், விண்கலத்திலிருந்து வெற்றிகரமாக பிரிந்து, நிலவின் முதல் படங்களை பகிர்ந்திருந்தது. அதன் பின் கடந்த 18-ந்தேதி அன்று விண்கலத்தில் இருந்து பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, நேற்று அதிகாலை 2 மணியளவில் லேண்டரின் சுற்றுவட்டப்பாதையானது இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ந்தேதி அன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படங்களை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 21, 2023
Here are the images of
Lunar far side area
captured by the
Lander Hazard Detection and Avoidance Camera (LHDAC).
This camera that assists in locating a safe landing area -- without boulders or deep trenches -- during the descent is developed by ISRO… pic.twitter.com/rwWhrNFhHB