திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஊடகத்தில் பணியாற்றி பயங்கரவாதியாக மாறியவன் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை - ஜம்முவில் பாதுகாப்புப்படை அதிரடி.!
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியில் ஒருவனான ரயீஸ் அஹமத் பட் உள்ளூரில் Valley News Service என்ற ஊடகத்தில் பணியாற்றி பயங்கரவாதியாக மாறியது அம்பலமாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், அதனை முறியடிக்க இந்திய இராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று ஸ்ரீ நகரில் உள்ள ரைனாவாரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்தனர். பயங்கரவாதிகள் தரப்பில் தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலின் முடிவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் குறித்து விசாரணை செய்கையில், இருவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு ஆதரவு பயங்கரவாதிகள் என்பது, அவர்கள் கூட்டத்திற்குள் 'C' என்ற மூன்றாவது தரவரிசையில் உள்ள இவர்கள், சமீபத்தில் அங்கு நடந்த பல்வேறு குற்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியில் ஒருவரான ரயீஸ் அஹமத் பட் உள்ளூரில் Valley News Service என்ற ஊடகத்தில் பணியாற்றி, கடந்த 2021 ஆம் வருடத்திற்கு பின்னர் பயங்கரவாதிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்தியதும் அம்பலமானது. அதனைப்போல, மற்றொரு பயங்கரவாதி பீஜ்பெஹ்ரா பகுதியை சேர்ந்த ஹலீல் அக் ராஹ் என்பதும் உறுதியானது.