"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
#ஜம்முகாஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கி 3 இராணுவ வீரர்கள் பரிதாப பலி.. பாதுகாப்பு பணியில் நடந்த சோகம்.!
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவானது கடுமையாக இருந்து வருகிறது. இதனால் எங்கும் வெண்போர்வை போர்த்தினார் போல மலைகளும், காடுகளும் வெண்ணிறத்தில் நிறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மாசில் செக்டரில் 3 இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் மூவரும் சிக்கிக்கொண்ட நிலையில், தகவல் அறிந்த இராணுவத்தினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் மூவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
55 வது ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவை சேர்ந்த சௌவிக் ஹஜ்ரா, முகேஷ் குமார், கெய்க்ஃவாட் மனோஜ் லக்ஷ்மன் ராவ் ஆகிய 3 பேர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் உடல் மீட்கப்பட்டு இராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.