மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லையில் பாதுகாப்பு படையினர் அதிரடி; 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டம், சிந்தாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக இன்று எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த இந்திய இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர், சம்பவ இடத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
#BreakingNews
— PRAJAKTA SINGH (@Prajakta_Singh2) July 18, 2023
Jammu Kashmir- #Encounter with terr@rists in Poonch, security forces k1lled 4 terr@rists .#JammuKashmir #IndianArmy #ElvishIsTheBoss #SeemaHaidar #TejRan #OommenChandy #WorldEmojiDay pic.twitter.com/OnnpHNh5Ou
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தவே, பதில் தாக்குதலில் இறங்கிய அதிகாரிகள் 4 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினர்.
அவர்களின் உடல் மீட்கப்பட்டு பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இறந்த தீவிரவாதிகள் யார்? எந்த அமைப்பை சார்ந்தவர்கள்? என்ற விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.