தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஜம்முவில் 8 பயங்கரவாதிகள் அதிரடி கைது; அரசு பணியாளராக, நீதிமன்ற எழுத்தராக பணியாற்றிய பகீர் தகவல் அம்பலம்.!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் சிஐடி அதிகாரிகள் மற்றும் மாநில புலனாய்வு முகாமை அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்குள்ள தோடா மாவட்டத்தில் 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில், சிலர் தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அரசு பணியாளர் என்பதும், தப்பி ஓடிபவர்களில் அரசு பணியாளர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் தண்டனையிலிருந்து தப்பி இயல்பான வாழ்க்கை வாழ்ந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த எட்டு பயங்கரவாதிகளும் என அடில் பரூக் பரிடி, முகமது இக்பால் @ ஜாவித், முஜாகித் உசைன் @ நிசார் அகமது, தாரிக் உசைன், இஷ்தியாக் அகமது, அஜாஸ் அகமது, ஜமீல் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களின் பரூக் பரிதி ஜம்முவில் இருக்கும் மாநில கல்வி வாரியத்திலும், தாரிக் நீதிமன்ற வளாகத்தில் எழுத்தர் ஆகவும் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.