மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய இராணுவம் அதிரடி.. ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி என்கவுண்டர்..!
பாரமுல்லா மாவட்டத்தில் பதுங்கியிருந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த LeT தளபதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டம், பரிஸ்வானி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக புத்கம் காவல் துறையினர் மற்றும் இராணுவ வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, மால்வா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் ஆகியோர் பதில் தாக்குதலும் நடத்தியுள்ளனர். முதற்கட்டமாக 3 இராணுவ வீரர்கள் மற்றும் 1 உள்ளூர் வாசி காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, என்கவுண்டர் தொடர் நடைபெற்றது.
இதன்முடிவில், 1 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அதிகாரிகளால் சுட்டு கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவனின் அடையாளம் சோதனை செய்யப்பட்டது. அப்போது, அவன் LeT (லஷ்கர்-இ-தொய்பா) அமைப்பின் தலைமை தளபதி யூஸுப் கண்ட்ரூ என்பது உறுதியானது.
இவன் ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருக்கிறான். மேலும், இராணுவ வீரர்கள், அப்பாவி பொதுமக்கள், காவல் துறையினரை முந்தைய காலங்களில் கொலை செய்த விவகாரத்தில் தொடர்புடையவன் என்பதும் உறுதியானது.