மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜம்மு காஷ்மீரில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு; செயலலிப்பு செய்யப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வந்தாலும், அங்கு எல்லையில் பாதுகாப்பு படையினர் நில்லநிறுத்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பார்த்துகொள்ளப்படுகிறது.
இந்நிலையில், இன்று அங்குள்ள நர்வால் - சித்ரா நெடுஞ்சாலையில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் டிபன் பாக்ஸ் ஒன்று இருந்துள்ளது.
இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்தனர். பின், ஏதேனும் வெடிகுண்டாக இருக்கலாம் என வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சோதனை செய்தபோது, 2 கிலோ அளவிலான IED வெடிகுண்டு இருப்பது உறுதியானது. வெடிகுண்டு பாதுகாப்பாக செயலிழப்பு செய்யப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.