திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
24 வயது இளம்பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல்.. மர்ம நபரின் வெறிச்செயலால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.!
வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த இளம்பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய பயங்கரம் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ நகர், ஷாபா காடல் பகுதியில் 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள வாண்ட்போரா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இளம்பெண் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல சாலையில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபரொருவர், இளம்பெண்ணின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தி தப்பி சென்றுள்ளார்.
ஆசிட் தாக்குதலால் படுகாயமடைந்த பெண்மணி அலறித்துடிக்கவே, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு மர்ம நபருக்கு வலைவீசியுள்ளனர். மேலும், இளம்பெண் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.