மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காஷ்மீரில் நடந்த பல தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முக்கிய பயங்கரவாதி கைது: டெல்லி காவல்துறை அதிரடி.!
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத எண்ணம் கொண்ட நபர்களால், பயங்கரவாத தாக்குதல் என்பது கடந்த காலங்களில் அதிகளவு முன்னெடுக்கப்பட்டது. தற்போது இராணுவத்தின் தொடர் முயற்சியால் பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டு, உளவுத்துறையால் அவர்களின் சதிகள் முறியடிக்கப்படுகின்றன.
அந்த வகையில், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வந்த பல்வேறு பயங்கரவாத சம்பங்களுக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியாக ஜாவேத் அகமது என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.
இவரை கைது செய்ய டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு முயற்சி எடுத்து வந்த நிலையில், அவர் தொடர்பான தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 இலட்சம் ரொக்கம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், மத்திய உளவுத்துறை உதவியுடன், டெல்லி காவல் துறையினர் ஜாவேத்தை
கைது செய்தனர்.