மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த ஒருவார்த்தை எழுதியதால்.. பாஸ் போட்ட ஆசிரியர்.. உ.பி.யில் பரபரப்பு.!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்பூர் பகுதியில் வீர பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் இருக்கிறது. இதில், ஏராளமான பாடப்பிரிவுகள் இருக்கும் நிலையில் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்வில் குளறுபடி இருப்பதாகவும், பணம் வாங்கிக்கொண்டு பேராசிரியர்கள் பாஸ் போட்டு விடுவதாகவும் முன்னால் மாணவர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து மருந்தியல் பாடப் பிரிவின் கீழ் பயிலும் 4 மாணவர்களின் விடைத்தாள்கள் மீண்டும் சரிபார்ப்பு செய்யப்பட்டது. அந்த மாணவர்களின் விடைத்தாள்களில் ஜெய் ஸ்ரீராம் என்ற வாசகம் மற்றும் தங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் சிலரது பெயர்கள் இடம்பெற்று இருந்தது. இந்த தாள்களை திருத்திய பேராசிரியர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை வழங்கி பாஸ் செய்துள்ளனர். நியாயமாக பார்த்தால் அவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண்களை பெற வேண்டியவர்கள்.
ஆனால், ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகத்தை எழுதிய காரணத்திற்காக அவர்களை பாஸ் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறையின் இரு ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி பல்கலைக்கழக மூத்த அதிகாரி ஒருவர் பேசிய போது, "மருந்தியல் துறையின் இரு ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். ராஜ் பவனில் எங்களுக்கு அனுமதி கிடைத்ததும் அவர்கள் விரைந்து பணி நீக்கம் செய்யப்படுவார்கள்." என்று தெரிவித்து இருக்கிறார்.