திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓசிக்கு இனிப்பு கேட்டு ஆசிட் தாக்குதல்.. 7 பேர் படுகாயம்., துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டம், ஜெர்முண்டி ஹரிப்பூர் கிராமத்தில் ஸ்வீட் கடை செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இக்கடைக்கு 3 பேர் கும்பல் வருகை தந்துள்ளது.
கடையில் இனிப்புகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு பின்னர் பணம் தருவதாக அவர்கள் புறப்பட்ட நிலையில், கடையின் உரிமையாளர் பணத்தை வைத்துவிட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இதனால் இருதரப்பு வாக்குவாதம் ஏற்படவே, 3 பேர் கும்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. பின்னர், சிறிது நேரத்தில் ஆசிட் பாட்டிலை வாங்கி வந்து ஸ்வீட் கடையில் ஆசிட் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் கடையின் உரிமையாளர் மற்றும் இனிப்பு வாங்க வந்திருந்தவர்கள் என 7 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.