96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அறிமுகமாகிறது ஜியோ ரயில் ஆப்; ஜியோ வாடிக்கையாளர்கள் யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.!
ரயில் சேவை குறித்த தகவல்களை பெற ஜியோ ரயில் ஆப்ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக ஜியோ நிறுவனம் அளித்துள்ளது.
சமீபகாலமாக தகவல் தொழில் நுட்பத்துறையில் ஜியோ நிறுவனம் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக செல் போன்கள் மற்றும் இணைய வசதி மிகக்குறைந்த கட்டணத்தில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது.
இந்நிலையில், புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த ஜியோ ரயில் ஆப் மூலம் ரயில் பயண அட்டவனை, டிக்கெட் பதிவு செய்த வரலாறு, முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து செய்வது, பி.என்.ஆர் நிலவரம், தட்கல் முன்பதிவு போன்ற வசதிகளை பெறலாம்.
இந்தியாவின் முக்கிய தரைவழி போக்குவரத்தான ரயில்வே சேவை குறித்த இந்த விபரங்களை ஜியோ நிறுவனம் தனது ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது. ஜியோ ஸ்டோரில் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.