பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
கர்நாடக புதிய முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை.! இவர் யார் தெரியுமா.?
கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி எடியூரப்பா 4-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. எனவே எடியூரப்பா பதவியேற்கும் முன்னரே, 2 ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை அவரிடம் விதிக்கப்பட்டது.
கர்நாடகத்தில் பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து அடுத்த முதல்வரை தேர்வு செய்ய பாஜக சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சரான பசவராஜ் பொம்மை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அமைச்சரவையும் மாற்றி அமைக்கப்படுகிறது. எடியூரப்பா கவனித்து வந்த நிதித்துறை, பசவராஜ் பொம்மை கூடுதலாக கவனிக்க உள்ளார். பதவியேற்பு நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவராக பசுவராஜ் பொம்மை அறியப்படுகிறார். இவரது தந்தை எஸ்.ஆர் பொம்மையும் கர்நாடக முதலமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.