பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தோஷத்தால் திருமணம் தடைபட்ட பெண்ணை கரம்பிடித்த 3 அடி உயரமுள்ள இளைஞர்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட்டை, பாதாமி நீலகுந்தா கிராமத்தில் வசித்து வருபவர் பசவராஜ் (வயது 28). இவர் பீடா கடையை நடத்தி வருகிறார். மேலும், அவர் 3 அடி உயரம் கொண்ட மனிதர் ஆவார்.
இதனால் பல்வேறு இடங்களில் பசவராஜுக்கு வரன் தேடியும் அமையாத நிலையில், விஜயபுரா மாவட்டம் கோளாரா அருகேயுள்ள காணி கிராமத்தை சேர்ந்த ருக்மணி கும்பார் என்ற பெண்மணிக்கு பல தோஷத்தால் திருமணம் தடைபட்டுள்ளது.
இந்த தகவல் பசவராஜுக்கு தெரியவரவே, அவர் ருக்மணியை திருமணம் செய்ய முன்வந்துள்ளார். இரு குடும்பத்தினருடன் பேசி முடித்த நிலையில், பிப். 21 ஆம் தேதியான நேற்று தம்பதிகளின் திருமணம் நீலகுந்தா கிராமத்தில் வைத்து நடைபெற்று முடிந்தது.