மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மைனர் சிறுமியுடன் 2 முறை ஓட்டம் பிடித்த இளைஞர்; 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பெங்களூர் நீதிமன்றம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் வெங்கி. இவர் மைனர் சிறுமியை காதலித்து கரம்பிடிக்க துணிந்ததையடுத்து போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
சிறுமியின் பெற்றோர் புகாரின் பேரில், முதல் முறை சிறுமி மீட்ப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, இரண்டாவது முறையும் சிறுமி தனது காதலருடன் ஓட்டம் பிடித்தார். ஜாமினில் வெளியே வந்த காதலன், சிறுமியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்து சிறுமியை திருமணம் செய்ய அழைத்து சென்றுள்ளார்.
இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஜாமின் கூட கிடைக்காமல் தவித்த நிலையில், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவுபெற்று, நீதிமன்றம் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்து, ரூ.41 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31, 2021ல் முதல் முறையாக சிறுமி தனது காதலருடன் ஓட்டம் பிடித்தார். பின்னர் பெற்றோர் புகாரின் பேரில் சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, இரண்டாவது முறை 16 ஏப்ரல் 2022 அன்று சிறுமியின் பெற்றோரை கொலை செய்வேன் என்று மிரட்டி காதலன் காதலியை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
இருவருக்கும் சித்தூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணமும் நடைபெற்றுள்ளது. இரண்டாவது முறையும் மீட்கப்பட்ட சிறுமியிடம் நடந்த விசாரணையில் மேற்கூறிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இவ்வழக்கில் நீதிபதிகளில் அதிரடியாக தங்களின் தீர்ப்பை வழங்கி இருக்கின்றனர்.