தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஏ.டி.எம் கொள்ளை முயற்சி தோல்வி.. காரில் காவலர்களிடம் லிப்ட் கேட்டு சிக்கிய திருடர்கள்..! பக்கா ஸ்கெட்ச் பிசுபிசுத்த பரிதாபம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாபுரா - நந்திமாலை சாலையில் ஏ.டி.எம் உள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு வந்த 2 பேர், பணம் எடுப்பதுபோல நடித்து, இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
அவ்வழியாக வந்த நபரொருவர் கொள்ளை முயற்சியை கண்டு கிராம மக்களுக்கு தகவலை தெரிவிக்கவே, கிராம மக்கள் விரைந்து வந்துள்ளனர். இதனைக்கண்ட இருவரும் தப்பி செல்ல, தொட்டபள்ளாபுரா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, மாற்று சீருடையில் இருந்த காவலர்கள் காரில் விரைந்து செல்ல, மாலேகோட்டை கூட்டுசாலையில் 2 பேர் இருந்துள்ளனர். அவர்கள் காவலர்களின் வாகனத்தை இடைமறித்து லிப்ட் கேட்ட நிலையில், காவல் அதிகாரிகள் மாற்று சீருடையில் இருந்ததால், வந்தது காவலர்கள் என்று தெரியாமல் காரில் ஏறியுள்ளனர்.
இருவரிடமும் அதிகாரிகள் விசாரித்தபோது, எதற்ச்சையாக ஏ.டி.எம் என்று ஒருவன் வாயை திறக்க, மற்றொருவன் அவனை அமைதிப்படுத்த, சுதாரித்த அதிகாரிகள் வாகனத்தில் வைத்தே இருவரையும் கைது செய்தனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நெலமங்களா அருகேயுள்ள அரிசினகுண்டே கிராமத்தை சேர்ந்த கக்கன் மற்றும் சச்சின் என்பது உறுதியானது. இவர்கள் தான் தொட்டபள்ளாபுரா - நந்திமலை சாலையில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்பது உறுதியாக, இருவரையும் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.