திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓய்வுபெற்ற மத்திய புலனாய்வு அதிகாரி பதிவெண் இல்லாத கார் ஏற்றி கொலையா?.. கர்நாடகாவில் பரபரப்பு.. அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!
நடைப்பயிற்சிக்கு சென்ற ஓய்வுபெற்ற மத்திய புலனாய்வு அதிகாரி கார் ஏற்றி மரணித்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், மத்திய புலனாய்வு அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆர்.எஸ் குல்கர்னி (வயது 83). இவர் தினமும் நடைப்பயிற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை அவர் மங்களூர் மானசா கங்கோத்திரி பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கையில், அடையாளம் தெரியாத வாகனம் அவரின் மீது மோதியதில் கீழ விழுந்தார்.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கவே, அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக ஜெயலட்சுமி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பதிவெண் இல்லாத கார் குல்கர்னியின் மீது மோதியது உறுதியானதால், இது திட்டமிட்ட கொலையா? விபத்தா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.