மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொதிக்கும் சாம்பாரை மனைவியின் மீது ஊற்றிய கொடூர கணவன்: வாக்குவாதத்தில் மதியிழந்து வெறிச்செயல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில், மனைவியின் மீதான ஆத்திரத்தில் கொதிக்கும் சாம்பாரை அவரின் மீது ஊற்றியதால், பெண்ணின் கை, தொடை, வயிறு பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள மதிகெரே எச்.எம்.டி லேஅவுட் பகுதியில் வசித்து வருபவர் சையத் மௌலா (வயது 48). இவரின் மனைவி சனா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). சனா சையத்தின் இரண்டாவது மனைவி அவர். சையத் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 21ம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டில் சையத் சாப்பிட அமர்ந்துள்ளார். அச்சமயம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சையத், தனது மனைவியின் மீது கொதிக்கும் சாம்பாரை தூக்கி ஊற்றியுள்ளார்.
மேலும், அவரை மேல்தளத்தில் இருந்து கீழே தள்ளிவிட முயற்சித்தும் இருக்கிறார். கத்தியை எடுத்து வெட்டி கொலை செய்யவும் துணிந்துள்ளார். சனாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வரும் சையத், கடந்த 2 மாதங்களாக வீட்டின் வாடகையை கொடுக்கவில்லை. இவர்கள் வீட்டருகே எலக்ட்ரீசியன் வேலை வந்தபோதும், அதனை சையத் பார்க்கவில்லை.
வாடகை பணம் கேட்க அவ்வப்போது வீட்டின் உரிமையாளர் வந்து சென்றுள்ளார். இதுகுறித்து மனைவி கணவரிடம் கூறியும் பலனில்லை. இதன் தொடர்ச்சியாக சம்பவத்தன்று நடந்த வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த சையத் சனாவின் மீது சாம்பாரை ஊற்றி இருக்கிறார்.
சனா அப்பகுதியில் கட்சி ஒன்றின் பிரதிநிதியாகவும் இருந்து வந்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பு சையத் முதல் மனைவியின் மகளுக்கு திருமணம் செய்ய லோன் வாங்கியிருந்த நிலையில், அதனை செலுத்த இயலாமல் அவதிப்பட்டுள்ளார்.
இரண்டாவது திருமணத்தின்போது கிடைத்த பணத்தை வைத்து அவர் கடனை சனா உதவியிருந்த நிலையில், அதற்கான பணத்தை வரவையும் சையத் வழங்கவில்லை என்பது தெரியவந்தது. தற்போது இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத்தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது.