மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோரை பழிவாங்க 15 வயது சிறுமியின் மீது நாயை ஏவிய கொடூரம்; வேலைக்கு வர மறுத்த ஆத்திரத்தில் அதிர்ச்சி செயல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், மாடி பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமாக கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது.
இந்த பண்ணையில் கூலித்தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறாக தம்பதிகள் இருவர் வேலை பார்த்து வந்ததாக தெரியவருகிறது.
சம்பவத்தன்று தம்பதிகள் வேலைக்கு வரவில்லை. உரிமையாளர் வேலைக்கு தம்பதிகளை அழைத்தபோது, அன்றைய நாள் தங்களால் வர இயலாது என தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், தம்பதிகளின் 15 வயது மகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரையும்போது நாயை ஏவி கடித்து குதறவைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தற்போது காவல் துறையினர் கோழிப்பண்ணை உரிமையாளரை தேடி வருகின்றனர்.