#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனாவால் உயிரிழந்த நண்பனின் மனைவிக்கு வாழ்வு கொடுத்த பாசமிகு தோழன்.. இதுவல்லவோ தெய்வீக நட்பு.!
நண்பனின் மனைவி கணவனை எண்ணி வருந்தி தற்கொலை செய்துகொள்ள, நண்பனின் மனைவியை காப்பாற்றி கரம்பிடித்த நண்பனின் செயல் வெகுவாக பாராட்டுகளை பெற்று வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் முள்ளூர் கிராமத்தில் வசித்து வருபவர் சேத்தன் குமார் (வயது 41). ஹனூர் நகரை சேர்ந்தவர் அம்பிகா (வயது 30). இவர்கள் இருவருக்கும் கடந்த 8 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
சேத்தன் குமார் பெங்களூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த நிலையில், அவரின் மனைவி அம்பிகா மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
மேலும், கணவர் சென்ற இடத்திற்கே நாமும் சென்றுவிடலாம் என்று எண்ணி தற்கொலைக்கும் முயற்சி செய்துள்ளார். இந்த தகவலை அறிந்த சேத்தன் குமாரின் நண்பர் லோகேஷ், அம்பிகாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்து உயிரை காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில், லோகேஷ் அம்பிகாவின் நிலையை உணர்ந்த நிலையில், நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கணவரின் மறைவுக்கு பின்னர் தனக்கு ஆறுதலாக இருந்த அவரின் நண்பரை கணவராக்க அம்பிகாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து தங்களின் வீட்டில் இருவரும் தெரிவிக்க, அவர்களும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் திருமணத்திற்கு பச்சை கொடி காண்பித்துள்ளார். இதனையடுத்து, கடந்த ஜன. 27 ஆம் தேதி அம்பிகா - லோகேஷ் தம்பதிகளுக்கு பெங்களூரில் வைத்து திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, செய்தியாக மாறவே பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், லோகேஷுக்கு தங்களின் மனப்பூர்வமான பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.