#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பலாத்காரம் செய்ய முடியாததால், 62 வயது தாய் கொலை; மகன் வெறிச்செயல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷணா கன்னடா மாவட்டம், கொண்டேலா கிராமத்தில் வசித்து வரும் மூதாட்டி ரத்னம் ஷெட்டி (வயது 62). இவரின் மகன் ரவிராஜ் செட்டி.
கடந்த அக். 26ம் தேதி முதல் இவர்களின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. நேற்று வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றமும் வீசியுள்ளது.
இதனையடுத்து, சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டில் சோதனை செய்தபோது, 62 வயது மூதாட்டி சடலமாக இருந்துள்ளார்.
அவரின் மகன் ரவிராஜ் ஷெட்டி மாயமான நிலையில், அவரை அதிகாரிகள் தேடியபோது தாயை கொலை செய்து தலைமறைவான பகீர் தகவல் அம்பலமானது.
இதனையடுத்து, விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் ரவிராஜை கைது செய்து விசாரணை செய்கையில், அக்.26ம் தேதி சம்பவத்தன்று ரவிராஜ் தனது தாயை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
அதற்கு தாய் உடன்பட மறுக்கவே, ஆத்திரத்தில் தாயை கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.