#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
3 வயது பச்சிளம் பெண் குழந்தை பலாத்காரம்.. 30 வயது கொடூரன் மதுபோதையில் வெறிச்செயல்..!
கெண்டிகேரி அருகே வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த 3 வயது சிறுமியை தூக்கி சென்று குடிகாரன் பாலியல் பலாத்காரம் செய்து தப்பி சென்ற பேரதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டம், உப்பள்ளி கெண்டிகேரியில் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 3 வயதுடைய பெண் குழந்தை உள்ள நிலையில், நேற்று முன்தினம் வீட்டு முன்புறம் குழந்தை விளையாடிக்கொண்டு இருந்துள்ளது. அப்போது, அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி கங்காதர் மாதர் (வயது 30), மதுபோதையில் வந்து சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து தனியே அழைத்து சென்றுள்ளார்.
சிறுமியை மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், குழந்தை அழுதபடியே வீட்டிற்கு வந்துள்ளது. சிறுமியின் உடலில் காயமும் இருந்த நிலையில், சிறுமி நடந்ததை தெரிவித்துள்ளார். பச்சிளம் சிறுமியின் கதறலை வைத்து கொடூரத்தை உறுதி செய்த பெற்றோர், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவல் கங்காதருக்கு தெரியவரவே, அவர் தப்பி சென்றுள்ளார். பின்னர், குழந்தையின் பெற்றோர் கெண்டிகேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கங்காதர் மாதரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.