96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ரூ.20 பணத்திற்காக மண்ணெண்ணெய் விளக்குடன் நடந்த குடுமிபுடி சண்டை.. உடல்கருகி பறிபோன உயிர்..!!
ரூ. 20 பணத்திற்காக நடந்த சண்டையில் மண்ணெண்ணெய் விளக்கால் பெண் தாக்கி, மற்றொரு பெண் உயிரிழந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் கிராமத்தைச் சார்ந்தவர் ருக்கம்மா (வயது 40). அதே கிராமத்தில் மளிகைகடை நடத்தி வருபவர் மல்லம்மா. கடந்த 22-ஆம் தேதி மல்லம்மாவின் கடையில் ருக்கம்மாவின் மகளான கீதா பொருட்களை வாங்கி மீதமாக ரூ.20 பெற்றுச் சென்றுள்ளார்.
அந்த 20 ரூபாய் நோட்டு கிழிந்திருந்த நிலையில், அதனை எடுத்துக்கொண்டு மல்லம்மா கடைக்கு சென்ற ருக்கம்மா மற்றொரு புதிய ரூபாய் நோட்டை கேட்டு பிரச்சினை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் மல்லம்மாவுக்கும், ருக்கம்மாவுக்கும் இடையே தகராறு ஏற்படவே, கடையிலிருந்த மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து மல்லம்மா, ருக்கமாவை அடிக்க முயற்சித்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இருவரின் மீதும் தீக்காயம் ஏற்படவே, அவர்களை மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர்m அங்கு ருக்கமா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மல்லமாவுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.