#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்; காதலனின் தாயை கட்டிவைத்து தாக்கிய பெண் தரப்பு.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டம், அரேமால்பூர் கிராமத்தில் வசித்து வரும் இளைஞர், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காதல் ஜோடி தங்களின் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தரப்பினர், இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கி இருக்கின்றனர். அவதூறான வார்த்தைகளும் பேசப்பட்டுள்ளன.
இந்த விஷயம் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற நிலையில், தற்போது அதன் வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.