பிகினியோ, எந்த உடையோ அவர்களின் விருப்பம் - பிரியங்கா ட்விட்டால் கலவரமாகும் ட்விட்டர்.! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர நிர்வாகம் தடை விதித்ததை தொடர்ந்து, முஸ்லீம் மாணவிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போராட்டமும் நடைபெற்ற நிலையில், இந்து அமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
இதனால் சம்பவம் இந்து - முஸ்லீம் பிரச்சனையாக உருவாக, மற்றொருபுறம் அம்பேத்கார் ஆதரவு மாணவர்கள் நீலத்துண்டை அணிந்து கல்லூரிக்குள் வந்தனர். சர்ச்சை சம்பவம் தொடர்ந்து அதிகரிக்க, நேற்று அங்குள்ள கல்லூரியில் இந்திய தேசிய கொடி கம்பத்தில் காவி கொடியை இந்து அமைப்பு மாணவர்கள் ஏற்றியதால் கலவர சூழல் உருவானது.
இதனையடுத்து, கர்நாடக மாநிலத்தில் எப்போதும் மத கலவரம் ஏற்படலாம் என்ற அச்சத்தில், 3 நாட்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இந்திய அளவில் தெரியவர, பலரும் முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை முற்றுகையிட்டு இந்து மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷமெழுப்ப, கல்லூரி மாணவி அல்லாஹ் அக்பர் என முழக்கமிட்டு இந்திய அளவில் வைரலாகினார். அவருக்கு ஆதரவாக இந்து அமைப்பை சாராத நடுநிலை இந்து மாணவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பிரியங்கா காந்தி ட்விட் பதிவு செய்துள்ளார். அந்த ட்விட்டில், "பிகினி, சாதாரண ஆடை, ஜீன்ஸ் அல்லது ஹிஜாப் என எதுவாக இருந்தாலும், அவள் என்ன அணிய வேண்டும் என்பதை முடிவு செய்வது ஒரு பெண்ணின் உரிமை. இந்த உரிமை இந்திய அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள். #அவளுக்கு தேவை என்பதை அவளே தேர்ந்தெடுப்பால்" என்று தெரிவித்துள்ளார்.
Whether it is a bikini, a ghoonghat, a pair of jeans or a hijab, it is a woman’s right to decide what she wants to wear.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 9, 2022
This right is GUARANTEED by the Indian constitution. Stop harassing women. #ladkihoonladsaktihoon
இந்த பதிவில், பிரியங்கா காந்தி கல்லூரி மாணவிகள் விவகாரத்தில், அவரின் வித்தியாசமான பார்வையுடன் பிகினியை இழுத்துவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகினி என்ற வார்த்தையை பிடித்துக்கொண்ட பலரும், உங்களின் ஆட்சியில் பிகினி அணிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவிகள் வருவதை ஊக்குவிப்பீர்களா? என்று கண்டன குரல் எழுப்பி கண்டித்து வருகின்றனர். அதுகுறித்த பல ட்விட்கள் வைரலாகி வருகிறது.
மேலும், இத்தாலியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு பிகினி உடை தரப்படுகிறதா? என்றும், பள்ளி சீருடைக்கும் நீங்கள் பிகினியை கூறியிருப்பதற்கும் என்ன சம்பந்தம்?, பிகினி உடைகள் கடற்கரையில், நீச்சல் குளத்தில் அணிந்து இருப்பார்கள். பள்ளிகளில் சமத்துவத்தை வளர்க்க வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் ஒட்டுமொத்த ஆடையையும் குறைக்க வழிவகை சொல்கிறீர்களா? இது எப்படிப்பட்டது? என்றும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், பிரியங்கா காந்தியின் ட்விட்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை வறுத்தெடுக்கும் பலரும், அவர் எந்த பள்ளி என்று பிகினி உடை குறித்த விஷயத்தில் ட்விட் செய்தாரா? பெண்ணின் உரிமையை பற்றி பேசி இருக்கிறார். உங்களின் பார்வையில் அப்படிதான் தெரியுமா?. உங்களின் இஷ்டத்திற்கு எதையாவது பேச வேண்டாம் என்று கண்டன குரலை உயர்த்தி வருகின்றனர். பொது நலன் கருதி கீழ்த்தரமான புகைப்படம் உள்ள ட்விட்கள் இணைக்கப்படவில்லை.
Decleration: News Published as Per Twitter Netizens Post