மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயங்கரம்... தப்பிச்சென்ற மனைவியை துரத்தி தாக்கிய கணவன்... காவல்துறை வழக்குப்பதிவு.!
கர்நாடக மாநிலத்தில் கணவன் மற்றும் மனைவி இடையே ஏற்பட்ட தகராறின் போது மனைவியின் மீது கணவன் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது கணவரை தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தம்பதியினர் ஸ்ரீநிவாஸ் மற்றும் சவிதா. இந்த தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என தெரிகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ஸ்ரீனிவாசன் மற்றும் சவிதா தம்பதி நேரடி வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
அப்போது சவிதா அவரது கணவரை பயங்கரமாக திட்டி இருக்கிறார். இதில் ஆத்திரம் அடைந்து அவரது கணவர் ஸ்ரீனிவாசன் கத்தியை எடுத்து கவிதாவை குத்தத் தொடங்கியுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து பயந்த சவிதா தனது வீட்டை விட்டு வெளியே ஓடினாலும் சாலை வழியாக துரத்தி சென்று அவரை கடுமையாக தாக்கி இருக்கிறார் ஸ்ரீனிவாசன்.
இத்தாக்குதலை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சவிதாவை ஸ்ரீனிவாசன் இடமிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது தலைமறைவாக இருக்கும் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.