மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபர தீர்ப்பு... சடலத்துடன் உடலுறவு கொண்டால் தண்டனை இல்லை... கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் அதிர்ச்சி.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று பிணங்களுடன் உடலுறவு கொள்வது தவறு இல்லை என்ற வகையில் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த தீர்ப்பு நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சார்ந்த ரங்கராஜ் என்ற 22 வயது இளைஞன் கடந்த 2015 ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவரை கொலை செய்து அவரது சடலத்துடன் உடலுறவு கொண்டிருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு கொலை செய்ததற்காக தூக்கு தண்டனையும் இறந்த பிணத்துடன் உடலுறவு கொண்டதற்காக பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் ரங்கராஜ்.
இந்த மேல் முறையீட்டு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் ஆகியோருக்கும் வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவரும் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தனர். அந்தத் தீர்ப்பின்படி ரங்கராஜ் அந்த பெண்ணை கொலை செய்ததற்கான ஆயுள் தண்டனை சரி என்று கூறி தீர்ப்பு வழங்கினர்.
மேலும் அவர் பிணத்துடன் உடலுறவு கொண்டதற்கான 10 ஆண்டுகள் தண்டனையை ரத்து செய்து தங்கள் தீர்ப்பை வெளியிட்டனர். இந்த தீர்ப்பு நாளெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.