குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
#BigNews: கர்நாடகாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது உறுதி - களத்தில் இறங்குகிறது என்.ஐ.ஏ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஆட்டோவில் நடந்த வெடி விபத்தில் பயங்கரவாத சதித்திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர், நாகுரி தெருவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு அருகே ஆட்டோ நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. சனிக்கிழமையான நேற்று ஆட்டோவில் சவாரி செய்தவருடன் பயணித்த வாகனம், கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்போது திடீரென வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணம் செய்தவர் என இருவரும் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆட்டோவில் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பயங்கரவாத தாக்குதலுக்கான முயற்சி தோல்வியுற்றுள்ளது என்று அறிவிக்கப்பட்டு, என்.ஐ.ஏ தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்த கர்நாடக மாநில டி.ஐ.ஜி உத்தரவிட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.