திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்.! பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்.!
கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அமைச்சர் ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அமைச்சர் படுக்கை அறையில் ஒரு இளம்பெண்ணுடன் அரைகுறை ஆடையுடன் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்த வீடியோக்கள் நேற்று கன்னட சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி பதவி விலக வேண்டும் எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்தார். அமைச்சரின் ஆபாச வீடியோ காட்சி வெளியாகி கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியினரும் போராட்டம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்பதால், ரமேஷ் ஜார்கிகோளி இன்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவை மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா ஏற்றுக் கொண்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார்.